பக்கம்:பாரதியம்.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உனக்கு நான் உபதேசிப்பதே தவறு என்றார் பாரதி. ● శ్మీ• இல்லற வீணையில் எங்கோ அபகரம் தட்டிப் பாட்டு வாத்தியார் பாரதி புதுச்சேரிப் புகைவண்டி நிலையத்தில் ஒதுங்கியிருந்தார். அவரைத் தேடிவந்து சுதி கூட்டிய பக்கவாத்தியக்காரர்களை ஒதுக்கித் தள்ளிவிட்டுப் பிடிவாதமாக இருந்தார் பாரதி. அவர் மேடையில் பின்பாட்டுப் பாடும் சுப்பு ரத்தனம் வந்து சுருதி கூட்டியபின் கோபந் தணிந்து ஏறினார் பாரதி. பாதி வழியில் ஐயரின் பசியறிந்து வேலைக்கார அம்மாக்கண்ணு விரும்பிக் கொணர்ந்த சுண்டலைச் சுப்புவும் பாரதியும் சுவைத்து உண்டார். சுண்டலைச்சுவைத்த சுப்பு 'தேவா மிருதம் என்றார். பாரதிக்கு உடனே தேவலோகக் கற்பனை திமிறிக் கொண்டு வந்தது. 169

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/169&oldid=817140" இலிருந்து மீள்விக்கப்பட்டது