பக்கம்:பாரதியம்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எண்ணங் கொண்டார். முதலில் பகவத்கீதை, பாஞ்சாலி சபதம் - ஆகிய இரு நூற்களை வெளியிட ஆசை கொண்டார். இதன் தொடர்பாக 1919 நவம்பர் 15ந் தேதி ஷண்முகம் செட்டியாருக்கு எழுதிய கடிதம் இதுதான்: “பூரீமான் வயி.சு. ஷண்முகம் செட்டியாருக்கு, ஆசிர்வாதம். பகவத்கீதையை அச்சுக்கு விரைவில் கொடுங்கள். தங்களுக்கு இஷ்டமானால் அதற்கு நீண்ட விளக்கம் எழுதியனுப்புகிறேன். நீண்ட முகவுரையும் எழுதுகிறேன். கீதைக்கு - புஸ்தக விலை ரூ. 1க்குக் குறைந்து வைக்க வேண்டாம். தடித்த காயிதம்; நேர்த்தியான அச்சு பெரிய எழுத்து: இடவிஸ்தாரம் - இவை கீதைக்கு மட்டுமேயன்றி நாம் அச்சிடப் போகும் புஸ்தகங்கள் எல்லாவற்றுக்கும் அவசியம். ஆங்கிலக் கவிகள், ஆசிரியரின் காவியங்களும் கதைகளும் இங்கிலாந்தில் எப்படி அச்சிடப்படுகின்றனவோ, அப்படியே நம் நூல்களை இங்கு அச்சிட முயலவேண்டும். அங்ங்ணம் அச்சிட ஒரு ரூபாய் போதாதென்று அச்சுக்கூடத்தார் அபிப்பிராயங்கொடுக்கும் பகூடித்தில் புஸ்தக விலையை உயர்த்துவதில் எனக்கு யாதோர் ஆக்ஷேபமுமில்லை. பாஞ்சாலி சபதத்துக்கு முகவுரை (இரண்டாம் பதிப்புக்கு) இன்னும் சில நாட்களில் அனுப்புகிறேன். தம்பி, இந்தப்"பாஞ்சலிசபதம்”இரண்டாம் பாகம் கையெழுத்துப் பிரதி அனுப்பியிருப்பதைச் சோம்பலின்றி தயவுசெய்து ஒருமுறை முற்றிலும் படித்துப் பாருங்கள். பிறகு அதை மிகவும் ஆச்சரிய மாகவும் அழகாகவும் அச்சிடுதல் அவசியமென்பது தங்களுக்கே விசதமாகும். புதுச்சேரியில் (பாடிய) பாட்டுக்கள் அனைத்தையும் இங்கு குழந்தை தங்கம்மா தன்னுடைய நோட் புக்குகளில் எழுதி வைத்திருக்கக் கண்டு அதைப் புதையல்போல் எடுத்து வைத்திருக் கிறேன்.” சிஆதாரம்: குமரிமலர் 1973 அக்டோபர் இதழ். 15

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/17&oldid=817141" இலிருந்து மீள்விக்கப்பட்டது