பக்கம்:பாரதியம்.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வண்டிக்காரன் சாரதியானான். 'ஒட்டடாரதத்தை' என்று உரத்த குரலில் உத்தரவிட்டார் பாரதி. வண்டி வானத்தில் மிதந்தது. ఈ్మ• புதுவைக் கடற்கரைச்சத்திரத்தில் கதாகாலட்சேபம் அரை வேக்காட்டுப் பாகவதரின் கச்சேரி களைகட்டாத காரணத்தால் அங்கங்கே பக்தர் கூட்டத்தில் அரட்டைக் கச்சேரி. பக்தர்களின் பேச்சலை பாகவதரை அமுக்கியது. மூச்சுத் திணறிய பாகவதர் அடிக்கடி 'கோபிகாஜீவன ஸ்மரணே - என்று கூக்குரலிட, பக்தர் கூட்டம் 'கோவிந்தா கோவிந்தா என்று சுண்டலை நினைத்துச் சுவை கொட்டிக் கூவியது. பாகவதரின் ஜீவமரணப் போராட்டம், பாரதியின் நகைச்சுவைக்கு வித்தாகியது. 170

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/170&oldid=817142" இலிருந்து மீள்விக்கப்பட்டது