பக்கம்:பாரதியம்.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அர்த்தம் சூல் கொண்ட மெளனம் 哆 o ஞானம்பாடி பாரதி, அன்றொரு மழைக் காலத்தின் 1% மணி அதிகாலையில்... திருவல்லிக்கேணியின் தெருநாய்கள் காதுமடக்கிப் படுத்துவிட்ட அந்த அதிகாலைப் பொழுதில்... நீ மூச்சடங்கிப் போனாயாம். இல்லை. வானத்தில் சுவடு பதிக்கும் ஆசைகள் ஏதுமின்றி விட்டு விடுதலையாகிப் பெட்டையொடு பறக்கும் சிட்டுக் குருவிகள் நீ வாழ்கிறாய், வாழ்கிறாய் என்று சத்தியம் செய்து பறக்கின்றன. பாரதி, நீ வாழ்கிறாய். மரங்களைப்போல் மழையில் நனைந்து விறகுகளைப்போல் வெயிலில் காயும் பாதையோரத்துப் பஞ்சைகள் வயிற்றில் பால்வார்க்க முடியாத பாவிகள்கூடி 174

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/174&oldid=817146" இலிருந்து மீள்விக்கப்பட்டது