பக்கம்:பாரதியம்.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேர்தல் அரக்கனின் அசுரபசிக்குக் கோடி கோடியாய் வரிப்பணம் கொட்டும் கொலை பாதகச் செயல்... செய்தித்தாள்களை நிரப்புகிற போதெல்லாம் பாரதி, ஜகத்தினை அழிக்க நீ மீசை முறுக்குகிறாய். உனக்கு மரணமில்லை. ஏனெனில் நீ மனிதனில்லை. பிரச்சினை. உள் உலகங்கள் செத்துப்போன தனிமனிதனின் பிரச்சினை. மனசாட்சியைப் பணத்திற்கு விற்று கோழைத்தனத்தை விலைக்கு வாங்கிய ஒர் சமுதாயத்தின் கூட்டுப் பிரச்சினை நீ. உனக்கு மரணமில்லை. காலவிருட்சம் உதிர்த்த நினைவுச்சருகுகளின் அடியில் நீ மறைந்து போவது சாத்தியமில்லை ஏனெனில் நீ வேர். இன்று துளிர்க்கும் ஒவ்வொரு மரகதத் தளிரும் உன் பெயர் சொல்லித்துளிர்க்கின்றது. நீசாவதில்லை. கால நெருப்பில் இன்று சாம்பல் தட்டிப்போன கோயில் யானை ஒன்றின் கால் இடறி நீ செத்தாய் என்று சொல்பவர்கள் மூடர்கள். உன்னை இடறிய யானை 175

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/175&oldid=817147" இலிருந்து மீள்விக்கப்பட்டது