பக்கம்:பாரதியம்.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாதை தந்த பாடல்கள் நீலமணி ருத்ராட்சமாலையையும் உருடடினான் வாளையும் கூர்பார்த்தான் மேகலையையும் வருடினான். இவனை ஒரு சாதியுள் அடக்குவது சிரமம். பகைவரின் முடிகளைச் செருப்புகளாகவும் பாவையரின் அடிகளைக் கிரீடமாகவும் தரித்துக் கொண்ட முன்னோர்களைப் போலவே இவனும் தகுதிகளை அங்கீகரித்தவன். பழங்களுக்கு இனிமை வந்ததே ஏவாள் கடித்த பின்னர்தான். சொற்களுக்குச் சொரணை வந்தது கூட பாரதியின் நாக்கால் தொடப்பட்ட போதுதான்! 177

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/177&oldid=817149" இலிருந்து மீள்விக்கப்பட்டது