பக்கம்:பாரதியம்.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இவன்ஜகங்கள் உணவுதரும் இல்லையேல் உடைபடும். எண்சீர்க் கழிநெடி யாசிரிய விருத்தம் பாடியவன் தமிழ் வயதுக்கு வந்தபோது புதுக்கவிதையெனும் புடைவை அணிவித்தான். இத்தாலி, பெல்ஜியம் ரஷ்யா - விலும் இவன் பார்வை சூரிய கிரணமாய்ப் பாய்ந்தது. புதிய அறத்தின் தேவையை உணர்ந்திவன் ஆத்தி சூடியை மாற்றி எழுதினான் மனிதனைக் கெளரவிக்காத மாஜி தர்மங்கள் இவனால் ரத்து செய்யப்பட்டன. ஏகாதிபத்திய பீரங்கிகளை வியர்க்கச் செய்யும் சக்தி எழுத்துகட்குண்டென இவன் நிரூபித்தான். பாரதி! கெளரவர்களோடு கண்ணனும் சேர்ந்து கொள்ளும் இன்றைய வஸ்திராபகரணங்களுக்கு எப்படிச் சபதமெடுப்பதென எங்களுக்குச் சொல்! 179

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/179&oldid=817151" இலிருந்து மீள்விக்கப்பட்டது