பக்கம்:பாரதியம்.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பனிக்கட்டியைப் பாருங்கள் உறைந்தாலும் அதன் உள்ளுக்குள் மறைந்து கொள்ளவேண்டும் உருகினாலும் அதனோடு கரைந்து விடவேண்டும் பனித் தமிழே உனக்குள் பாரதி ஒடி ஒளிந்துகொண்டது இப்படித்தானே. அந்த மகாகவி-உனக்குள் மறைந்தும் கரைந்தும் கிடப்பதையே ஒருவரமாக வாங்கிக்கொண்டவன் பூமியின் மேலே சாகாமல் இருப்பேன் சத்தியம் பொய்யில்லை என்றானே! எப்படித் தெரியுமா? கன்னித் தமிழே உன்னை யவன் காயகல்பமாய் சாப்பிட்டதால்த் தான் சாவுக்கே சவால்விட்டு கூப்பிட்டான் தமிழே உனக்கு அழிவில்லை ஆகவே அவனுக்கு மரணமில்லை. 181

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/181&oldid=817154" இலிருந்து மீள்விக்கப்பட்டது