பக்கம்:பாரதியம்.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இங்குள்ள தெருவெல்லாம்தமிழ் முழக்கம் செழிக்கச்சொன்னான் கருவெல்லாம் தமிழ் அமிழ்தில் குளிக்கச் சொன்னான். அறிவெல்லாம் தமிழ்த்தாயை வணங்கச் சொன்னான் தெருவெல்லாம்-என்ன தெரிகிறது இப்போது? எல்.கே.ஜி. யு.கே.ஜி. இது வென்ன காந்திஜி நேருஜியா? மம்மியாம் டாடியாம் அங்கிலாம் ஆண்டியாம் பாப்பாக்கள் இப்படிக் கூப்பிட்டு விட்டால் தாத்தாக்கள் கூட கூத்தாடுகின்றார் பேரக் குழந்தைகள் பெரிய அறிவாளி ஆனதாக. டாட்டா காட்டி பைபையென்றிந்தச் சின்னதுகள் சொன்னால் லாட்டரியில் லட்சம் 182

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/182&oldid=817155" இலிருந்து மீள்விக்கப்பட்டது