பக்கம்:பாரதியம்.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விழுந்ததுபோல் ஆனந்தம் அப்பனுக்கு அம்மாவோ பெற்ற பெருவயிற்றைத் தடவி தாயே பராசக்தி தகப்பனைப்போல் பிள்ளை தற்குறியாய் ஆகாமல் தப்பிக்க வைத்துவிட்டாய் உனக்குப் புதுப்பொங்கல் வைப்பேனென்று. பூரித்துப் போகின்றாள் எல்லாம் எதற்கு? தமிழை மறந்ததற்கு தாய்மொழியை மறந்ததற்கு அம்மாவோ சங்கங்கள் வளர்த்த சந்தனத் தமிழை-பால்ச் சங்குக்குள் கலந்துட்டி அங்கங்கள் புகுந்த எங்கள் அருந்தமிழை இதோ மழலை பேசும் இந்த அனிச்சமலர்கள் மறந்துவிட்டு ஆங்கிலத்தில் பேசியதே அதற்குத்தான்.இத்தனை ஆனந்தம் கொண்டாட்டம் பாரதி எங்களுக்கு பாட்டுக்கள் கொடுத்த பாட்டனாரே! - நீ பார்க்க விரும்பிய பாரதத்தில் 183

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/183&oldid=817156" இலிருந்து மீள்விக்கப்பட்டது