பக்கம்:பாரதியம்.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீட்டு மொழிக்கே விழாவெடுக்கப் படுமென்றாயே! வீட்டுமொழி இன்னுமிங்கே, திட்டு மொழியாக கிடக்கிறதே இந்தப் பூட்டுப் போட்டவன் வெள்ளைக்காரன் - இதைப் புரிந்து கொண்டவன். அன்று நீ ஒருவன் தான். அதனால்தான் அந்த ஆங்கிலப் பள்ளியில் தீது பல்லாயிரம் சேர்ந்ததென்று திடுக்கிடும் சேதி சொன்னாய் மற்றவர்களோ மாட்சிமை தங்கிய மகாராணியின் ஆட்சிக்கு கை கூப்பித் தொழுதுபின் தோப்புக் கரணமும் போட்டுக் கொண்டிருந்தார். காளிதாசன் கவிதைபுனைந்ததை கம்பன் என்றோர் மானுடன் வாழ்ந்ததை பாஸ்கரன் மாட்சியை பானினி மேன்மையை ஒன்றுமே அறியாமல் ஹென்றி மன்னன் கொன்ற பன்றிகள் எத்தனை? விக்டோரியாராணிக்குப் பிடித்த விளையாட்டு என்ன? இந்தச் 184

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/184&oldid=817157" இலிருந்து மீள்விக்கப்பட்டது