பக்கம்:பாரதியம்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தம்முடைய நூல் பிரசுரத் திட்டத்தில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், திரும்பவும் சுதேசமித்திரனில் பணியாற்ற சுதேச மித்திரன் அதிபர் ஏ. ரெங்கசாமி ஐயங்கார் விடுத்த அழைப்பை ஏற்று 1920 ஆகஸ்ட் - செப்டம்பரில் அதில் பாரதி சேர்ந்து விட்டார். சுதேசமித்திரனில் பணியாற்றிய சமயத்திலும், தமது நூல்கள் பதிப் பிக்கும் பணிகள் தொடர்பாக முன்னிலும் தீவிரமாக ஆர்வம் காட்டுகிறார், பாரதியார். தமது திட்டமுறைகளை விளக்கி மீண்டும் மீண்டும் கடிதங்களைத் தமது நண்பர்களுக்கு எழுதியே வந்தார். சென்னை தமிழ் வளர்ப்புப் பண்ணைச் செயலாளர் ஓர் நீண்ட அறிக்கை தாயரித்து, பாரதியின் நூல் பிரசுரத்திட்டத்திற்கு ஆதரவு திரட்ட முனைந்தார். நீண்ட அறிக்கை பாரதியின் புகழைப் பூமண்டலம் நிறைந்த கீர்த்தியாக வருணித்துவிட்டு, “இங்ங்னம் கீர்த்தி வாய்ந்த கவியரசர் ஒருவர் தமிழ்நாட்டில் இருப்பது நமக்கெல்லாம் சால மிகப் பெருமையன்றோ? இவர் தமிழ்நாட்டையும் தமிழ் பாஷையையும் மேம்படுத்தியதற்கு நாம் என்ன கைம்மாறு செய்யப் போகிறோம்?” என்ற ஓர் வினாவை எழுப்பி, பாரதியின் நூல் பிரசுர முயற்சிக்குப் பொருள் கொடுத்து, எக்காலத்திலும் அழியாத புண்ணியம் அடையும்படியும் வேண்டுகோள் விடுத்தது. இந்தத் தமிழ் வளர்ப்புப் பண்ணையின் அறிக்கையையும் இணைத்து தமக்கு நன்கு அறிமுகமானவர்களுக்கெல்லாம் கடிதம் எழுதினார் பாரதி. ஈரோட்டைச்சார்ந்த கருங்கல் பாளையத்தில் இருந்த நண்பர். தேசபக்தர் - பிரபல வக்கீல் தங்கப்பெருமாள் பிள்ளைக்கு எழுதிய கடிதத்தில் பாரதியார், தம் நூல்கள் அச்சாகி வெளிவந்தால், உலக இலக்கியத்தில் தமிழ் இலக்கியத்தின் மதிப்பு உயரும் என்றும், தம்முடைய நூல்கள் அச்சிடும் பணி தேசியத் திருப்பணி என்றுமே குறித்துள்ளார். தமிழ்நாட்டின்துரதிருஷ்டம்தான் என்னே? கவியரசர் தாகூருடைய நூல்கள் வங்க நாட்டிற்கு எத்தகைய உயர்வினையும், சிறப்பினையும் அளித்தனவோ, அத்தகைய உயர்வையும், சிறப்பையும் அளிக்கவல்ல மகாகவி பாரதியார் நூல்கள் அவர் விரும்பியபடி எதிர்பார்த்த வண்ணமாக வெளிவராதது பெருங் குறையேயாகும். பல்வேறு கால கட்டங்களில் பாரதியார் மேற்கொண்ட நூல் பிரசுரத் திட்ட முயற்சிகளுக்கு அளவேயில்லை. ஆனால் அவர் முயற்சிகளின் பலனாக எந்த நூலுமே வெளிப்படவில்லை. என்றாலும், 1920 17

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/19&oldid=817163" இலிருந்து மீள்விக்கப்பட்டது