பக்கம்:பாரதியம்.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சு பொறுக்குதில்லையே! இந்தப் பூமியையே சிலிர்க்கவைத்த புல்லாங்குழல்! மூச்சுக்காற்றையே இசைத்துப் பரவிய நாதஸ்வரம்! நாட்டுப்பற்றையே நரம்புகளாக்கி மீட்டிய பாட்டுவீணை! அவனது மூச்சுக்காற்றினை நாங்கள் சுவாசிக்கின்றோம்! - ஆம் என்றும் அவனை நேசிக்கின்றோம்! பாரதியே! எங்கள் மகாகவியே! “நெஞ்சு பொறுக்குதிலையே!” - இது நீ பாடிய பாட்டு! - எங்கள் இதய நரம்பைச் சுண்டி இழுக்கும் விரல்கள் - உன் கவிதைக் குரல்கள்! இருட்டில் பெற்றதால் தானோ என்னவோ நாங்கள் வாங்கிய சுதந்திரம் குறட்டைவிட்டுக் கொண்டிருக்கிறது! அதன் குறட்டை ஒலிக்கு மெல்லிசை மன்னர்கள் மெட்டமைத்துப் பார்க்கின்றார்கள்! 190

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/190&oldid=817164" இலிருந்து மீள்விக்கப்பட்டது