பக்கம்:பாரதியம்.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பட்டதாரிகள் வேலை தேடித் தேடி விதியில் அலைகின்றார்கள்! இவர்கள் கையிலுள்ள பட்டங்களுக்கும் சினிமாடிக்கட்டுகளுக்கும் வித்தியாசமே இல்லை! ஏனென்றால் கல்லூரி முடிந்து காட்சியும் முடிந்தபின் இரண்டுமே கிழித்தெறியப்படவேண்டியவை மரங்கள் பூத்துக் குலுங்குவதற்குப் பதில் கட்சிக் கொடிகளே கலர்கலராகப் பறப்பதால் மழைமேகங்கள் பயந்து வழிவிலகிச் சென்று விட்டன. எலிகளின் தொல்லைக்கு எல்லையே இல்லையென்று பூனைகளை வளர்த்தோம் - இந்தப் பூனைகளெல்லாம் புண்ணிய ஸ்தலங்களுக்கு தீர்த்த யாத்திரை சென்று விட்டதால் எலிகளோ - கிடைத்ததை யெல்லாம். தின்று கொழுத்துப் பெருச்சாளிகளாகிக் கட்டிடத்தையே குடைகின்றன! நீதியையும் நியாயத்தையும் நிலைநாட்ட நியாய ஸ்தலங்கள் நிறைய இருப்பினும் சாதியையும் சாராயத்தையும் ஒழிக்க 192

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/192&oldid=817166" இலிருந்து மீள்விக்கப்பட்டது