பக்கம்:பாரதியம்.pdf/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முடியாது. குழந்தைக்குப் பக்கத்தில் படுத்திருக்கும் தாயின் உறக்கத்தையா மரணம் என்பது? அெை! ஆயுதக்கிடங்கில் படுத்திருக்கும் போர்க்கருவிகள். முத்துக்களை விடவும் முத்துக் குளிப்பவரின் மூச்சுக் குமிழ்களே எனது பார்வையில் மதிப்பு மிக்கவை. புதுவையில் பதுங்கிய பாரதி கோழையோ? யார் சொல்வது? நீர்மூழ்கிக் கப்பலையா ராணுவக் கோழை என்பது? நெருக்கடி நேரங்களில் தங்களுக்குள்ளாகவே தங்களுக்குச் சமாதி கட்டிக்கொள்ளும் சங்கதியறியா வீரக் கவிமகனையா கோழை என்பது? மாதச் சம்பளத்துக்கு ஆபத்து வராத வரை... பிள்ளைகளின் கான்வென்ட் படிப்பிற்குப் 197

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/197&oldid=817171" இலிருந்து மீள்விக்கப்பட்டது