பக்கம்:பாரதியம்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நவம்பரில் சுதேசமித்திரன் புத்தகாலயப் பிரிவு கதாமாலிகா என்ற சிறுகதைகளும், கட்டுரைகளும் அடங்கிய நூல்தொகுதியை வெளியீடு செய்தது. இந்த நூல் பாரதியின் காலத்தில் வெளியான இறுதி நூல் ஆகும். தாம் கண்ட பிரசுர ஆசைத் திட்டங்கள் நிறைவேறாத நிலையிலேயே 1921ஆம் வருடம் செப்டம்பர் மாதம் 11ந்தேதி பாரதியார் மரணத்தைக் கடந்தார். மகாகவி பாரதி மரணத்தைக் கடந்ததும், ஒருசில அன்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க, செல்லம்மாபாரதி தமது சகோதரர் அப்பா துரை அவர்களின் ஆதரவுடன் சென்னை திருவல்லிக்கேணியில் பாரதி ஆச்ரமம் என்ற பெயரால் 1922இல் பிரசுர நிலையத்தை நிறுவினார். பாரதி ஆச்ரமம் 1922 ஜனவரியில் இரு நூற்களை - அதாவது சுதேச கீதங்கள் இருபாகங்களை வெளியிட்டது. புத்தக விற்பனை எதிர்பார்த்த அளவு இல்லாத காரணத்தால் பாரதி ஆச்ரமத்தின் பாரதி நூல்கள் பிரசுரப் பணிகளும் தடைப்பட்டன. இந்த இக்கட்டான நிலையில், பாரதி இலக்கியங்கள் வெளிப்படவேண்டும் என்ற ஒரே காரணத்தை முன்வைத்து 1924இல் பாரதி பிரசுராலயம் தோன்றியது. பாரதி பிரசுராலயம் பிரசுரப் பொறுப்பை ஏற்றுக் கொண்டதுமுதலாக தொடர்ந்து வரிசை வரிசையாகப் பாரதி நூல்கள் வெளியாயின. 1949ல் பாரதி நூல்களின் பதிப்புரிமையை தமிழக அரசு பொது வுடைமையாக்கியது. அரசுடைமையான பின்னர் அரசும் பாரதியார் நூல்வரிசைகளை வெளியிட்டது. இதன் பின்னர் தனியார் பதிப்பகங் களும் பாரதி நூல்களைப் பிரசுரிக்கத் தொடங்கின. இன்று பெரும்பாலான பதிப்பாளர்கள் மகாகவி பாரதியார் நூல்களை வெளியிடுவதில் பெரிதும் ஆர்வம் காட்டுகின்றனர். ஒரு நூற்றாண்டுக்கு முன் தோன்றி, தம் எழுத்துக்கள் நூல்வடிவம் பெறவேண்டும் என்பதில் தீவிரமுனைப்புடன் தொழிற்பட்ட பாரதிக் கவிஞனின் நூல்கள் இன்று ஏராளமாக விற்பனையாகின்றன. தமிழ்நாட்டின் புகழாகவும் தமிழ்ச்சாதியின்சக்தி அழிந்துபடவில்லை என்பதற்குச் சான்றாகவும் விளங்கும் மகாகவி பாரதிக்குச் சரியான நிலையான நினைவுச் சின்னங்கள் அவருடைய நூல்களே என்பதை எவரே மறுப்பர்? & *్మ* 18

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/20&oldid=817174" இலிருந்து மீள்விக்கப்பட்டது