பக்கம்:பாரதியம்.pdf/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆலயங்களின் இருண்ட சுவர்களில் அடிமைகளின் கிளிநாக்குகளில் சிறைப்பட்டுக் கிடந்த தமிழ்க் கவிதைப் பெண்ணை காற்றும் வெளிச்சமும் உள்ள வீதிக்கு அவன்கரங்கள் இழுந்து வந்தன. சங்க நாட்களுக்குப்பின்தான் பார்த்தறியாத மனிதர்களுடன் தமிழ்க்கவிதையைத் தோழமைப்படுத்தியது அவன்தூரிகைகள். வியர்வை மை தொட்டு சோகரசாயனம் தடவிய அவன் பேனா முனையில் புதிய பாரதப்படம் தெரிந்தது. இளங் காற்றே வலம் வந்த தமிழ்த்திருநாட்டில் - அவன் புயலின் மொழியில் பேசிய குயில். விடுதலைக் கனவுகளையே அடைகாத்து சுதந்திரகானங்களையே காற்றில் நிறைத்து தணியாததாகத்துடன் தன் மண்ணை நேசித்துக்கொண்டே விண்ணில் பறந்த விடுதலைப் பறவை. குனிந்து கிடந்த பாரத அன்னையின் கூனல் நிமிர்ந்த கவிதை ஆயுதங்களுடன் அவன் களத்திற்கு வந்தான் 201

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/201&oldid=817176" இலிருந்து மீள்விக்கப்பட்டது