பக்கம்:பாரதியம்.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதை என்ன வேப்பங்குலையா பேய் விரட்ட என்று இங்கு கவிஞர்கள் காலம் காலமாய் கருதிக்கிடந்தனர். அங்கங்களோடும் ஆடைகளோடும் சரசமும் சல்லாபமும் செய்த கவிகளின் எழுத்தாணிகளை அவன் முறித்துப் போட்டான். அந்தப் புரங்களில் அரண்மனைகளில் ஜமீன்தார்களின் சயன அறைகளில் ஆலயங்களின் இருண்ட சுவர்களில் அடிமைகளின் கிளிநாக்குகளில் சிறைப்பட்டுக் கிடந்த தமிழ்க் கவிதைப் பெண்ணை காற்றும் வெளிச்சமும் உள்ள வீதிக்கு அவன்கரங்கள் இழுத்து வந்தன. சங்க நாட்களுக்குப்பின்தான் பார்த்தறியாத மனிதர்களுடன் தமிழ்க் கவிதையைத் தோழமைப்படுத்தியது அவன்தூரிகைகள். வியர்வை மை தொட்டு சோக ரசாயனம் தடவிய அவன் பேனா முனையில் புதிய பாரதப் படம் தெரிந்தது. தமிழ்த் தாய்க்கு அலங்காரங்கள் செய்தே அலுத்துக் கிடந்தனர் நம் கவிஞர்கள். அவன்தான் அவள் ஆரோக்கியம் கெட்டுக்கிடக்கும் 202

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/202&oldid=817177" இலிருந்து மீள்விக்கப்பட்டது