பக்கம்:பாரதியம்.pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவலம் அறிந்து அமுது படைக்க ஆசைப்பட்டான். மாளிகை முற்றத்திலே சதிராடிய சொற்கள் நடைபாதைகளை முத்தமிட்டன. பின்னால் வந்த கவிஞர்களையெல்லாம் அவன் அரண்மனையிலிருந்து குடிசைகளுக்கு மதமாற்றம் செய்தான். அவதார பூமி இது என்பதால் அவனும் பல அவதாரம் எடுத்தான் 'வயிற்றுக்குச் சோறிட வேண்டும் - இங்கு வாழு மனிதர்க்கெல்லாம். என்று ஆசைப்பட்ட மணிமேகலை பாரத மாதாவுக்கு பள்ளியெழுச்சி பாடிய ஆண்டாள் நாட்டுமக்கள் பிணியெலாம் நையப் பாடென்று தெய்வங்கள் வந்து வரம் கேட்ட பக்தன் வெடிப்புறப் பேசு வீர்யப் பெருக்கு நையப்புடை வையத்தலைமைகொள் என்று புதுஉரை சொன்ன ஒளவை என்று அவனே எடுத்த அவதாரங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். அவன் தன் கவிதைகளை அலங்கரிக்கவில்லை. அவன் அடிவயிற்று நெருப்பே அவன் கவிதைக்கு அலங்காரம் ஆயிற்று. தேசக் கிழிசல்களைப் பார்த்த பின்பே அவன்தன் ஆடைக் கிழிசல்களை அறிந்து கொண்டான். 203

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/203&oldid=817178" இலிருந்து மீள்விக்கப்பட்டது