பக்கம்:பாரதியம்.pdf/204

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பட்டினியுடன் இல்லறம் நடத்தியதால் அவன்பாட்டுத் தலைவி நெருப்புக் குழந்தைகளையே இந்நிலத்தில் போட்டாள். வரவேற்பிதழ்கள் வாழ்த்து மடல்கள் இவற்றை எழுதியே காலம் கழித்த தமிழ்க் கவிஞர்களின் திருப் பட்டாளத்தில் போ போ! போ - என்று விடைகொடுக்கும் மடல்களை அவன்தான் விரைந்து எழுதினான். நாட்டை வருத்தும் தீமைகளை போ போபோ என்று விதிவரை ஒடி ஒடித்துரத்தினான். அவன் நாட்கள் எதிர் நீச்சலாகியது அவன் வாழ்க்கை போராட்டமாகியது அவன் கவிதைகள் பாரதத்தின் புதிய ஏற்பாடு ஆகியது. வெள்ளைத் தாளைக் கறுப்பாக்கும் வர்த்தகமல்ல கவிதை. சொந்தச் சோகங்களுக்கு கண்ணிரால் ஒத்தடம் கொடுப்பதல்ல கவிதை. தன் வயிற்றை வளர்க்க கருமியைக் கூட தோள் சிவக்கக் கொடுத்த வள்ளல் என்றுதுக்கி வைப்பதல்ல கவிதை. 204

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/204&oldid=817179" இலிருந்து மீள்விக்கப்பட்டது