பக்கம்:பாரதியம்.pdf/205

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறியாமை இருளில் வெளிச்சம் பாய்ச்சவும் உலகத் துன்பத்தின் ஆணிவேர்களை அசைத்துக் காட்டவுமே அவனது பேனாமை சிந்தியது. இந்திரன் சந்திரன் என்ற புகழ்ச்சி ஆலவட்டங்கள் பூமியில் விழ அக்ரமங்களின் முகத்தில் காறித்துப்பும் கலையை அவன் கற்றுக் கொடுத்தான் கர்ப்பத்தில் இருக்கும் குழந்தையின் முகத்தை கற்பனைக் கண்கொண்டு தாய் பார்ப்பதுபோல் தேசம் பிறக்கும் முன்பே அவன் தேசியத்தைப் பார்த்தவன் பாரதிக்கு தேசியம் என்பது தேசத்தைச் செதுக்கும் உளி. சிலருக்கோ தேசியம் என்பது பதவியில் இருக்கும் வழி. சிலரது தேசியம் - டெல்லிப் பட்டணத்தின் நீள அகலங்களுக்குள்ளேயே தன் பிரதேச எல்லைகளை அடைத்துக் கொண்டு சிறுத்துக் கிடக்கும் குகைமொழி சிலரது தேசியம் - இமயம் முதல் குமரிவரை 205

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/205&oldid=817180" இலிருந்து மீள்விக்கப்பட்டது