பக்கம்:பாரதியம்.pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரே கட்சியின் கொடிகள் பறப்பதுதான். சிலருக்கு தேசியம் - இந்தியக் காற்றை ஒரே ஒரு மொழிக்கு மட்டும் மேடையாக்குவது. பாரதிக்கு தேசியம் . ருஷ்யப் புரட்சி உருவாக்கிய சிந்தனை மலர்ச்சியும் பெல்ஜியத்தின் வீழ்ச்சி போதித்த எழுச்சியும் மாஜினியின் சபதம் மனதில் விளைத்த கோபமும் ஒன்றாய்த் திரண்டு உருவானது. செப்புமொழிகள் பதினெட்டும் சிந்தனை ஒன்றுமாய் அவன் மனவெளியில் எழுந்து நின்றாள் பாரத அன்னை. ஒரு குழந்தைக்கு மட்டும் கன்னத்தில் அன்பு முத்தமும் பிற குழந்தைகட்கு கழுத்தில் நகம் பதிக்கும் பழக்கம் அவள் அறியாள். இமயத்து நதிகளால் மையத்து நாட்டில் பயிர் செய்ய நினைத்தாள் அவன் பாரத தேவி. ஏனெனில். அவன் பாரதப் படத்தில் ஆறுகள் எல்லாம் 206

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/206&oldid=817181" இலிருந்து மீள்விக்கப்பட்டது