பக்கம்:பாரதியம்.pdf/207

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடல் நோக்கியே பாய்ந்தன. அணைக் கட்டுகளுக்குள் அவை அடக்கமாகவில்லை. காவிரிக் கரையில் நின்று கொண்டு அவன்"கங்கையாறு எங்கள் ஆறு என்றான். இன்றவன் வந்தால் காவிரியில் கால்நனைக்கவும் கையேந்த வேண்டும். நதிநீர்ப் பங்கீடு என்ற கெளரவ வார்த்தைகளால் நம் தேசியத்தின் கால் சுளுக்குகளுக்கு நாம் கட்டுப் போட்டுக் கொண்டிருக்கிறோம். அடிமைக் காற்றை அதிகம் சுவாசிக்கப் பிரியப்படாமலே முப்பத்தொன்பது வயதில் அவன மூச்சடங்கிப்போனான். அவன் விட்டுசென்ற வைரவரிகள் இன்னும் வாழ்க்கைவரிகள் ஆகவில்லை. நாம் அவனை ஆராதித்துக்கொண்டே இருக்கிறோம். இங்கு எங்காவது 207

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/207&oldid=817182" இலிருந்து மீள்விக்கப்பட்டது