பக்கம்:பாரதியம்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதி சக்தியைப் பாடியது ஏன்? டாக்டர்.சி. கனகசபாபதி பாரதி சக்தியை ஏன் பாடினார்? எப்படிப் பாடினார்? இந்தக் கேள்வி களுக்குப் பதில் காணப் புதிய திறனாய்வு அணுகுமுறையில் முற்படுவது இன்று ஒரு அவசியம் ஆகியிருக்கிறது. முதலில் பாரதியின் படைப்புக் காலகட்டங்களை வரிசையாகப் பார்க்கலாம். பாரதி 1897 முதல் 1904 வரை எட்டயபுரத்தில் சிருங்கார ரசப் பாடல்களில் ஈடுபட்டிருந்தார். கன்னத்தி னில்குயில் சத்தமே - கேட்கக் கன்றுது பார் என்றன் சித்தமே - மயக் கஞ்செய்யு தேகாமப் பித்தமே என்று பாடி ரசிப்பதில் எட்டயபுர மகாராஜா முன்னிலையில் சில நாட்களைக் கழித்தார். குயிலனாய் நின்னொடு குலவியின் கலவி பயில்வதிற் கழித்த பன்னாள் நினைந்துபின் என்று சமஸ்தானப் பண்டித நடையில் செய்யுள் செய்து கொண்டிருந்தார். 19

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/21&oldid=817185" இலிருந்து மீள்விக்கப்பட்டது