பக்கம்:பாரதியம்.pdf/210

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகராதிகளின் அந்தப் புரங்களில் வார்த்தைகளின் பலாத்காரத்தில் அலறிய கவிதைக்கு ஆனந்த சுதந்திரத்தை அறிமுகம் செய்தவனே! பூஞ்சிறகு அசைத்து உன் புதிய கவிதை புறப்பட்ட போது கிழிபட்டது கிழக்கு வழிவிட்டது வைகறைக்கு! அழுக்குகளையே அழகென்று ஆலாபனை செய்து கொண்டிருந்த எழுத்தாணிகள்-உன் பாட்டு வெள்ளத்தில் படிந்து ஞானக்குளியல் செய்து கொண்டன! வெடித்துக் கிடந்த காலத்தின் உதடுகளில் புன்னகை விதைகள்துவிப் புது முத்தம் தந்தவனே! ஒரு யுகத்தைத் திறந்த உன் கை விரல் நகக்கண் கூட இழிவுகளைக் கண்டு தகித்துச் சிவந்தது! 210

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/210&oldid=817186" இலிருந்து மீள்விக்கப்பட்டது