பக்கம்:பாரதியம்.pdf/213

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்றைக்கோ உன்னுடைய அன்றைக்கே நம்பிக்கை முகட்டின் உச்சியில் நின்று சிந்தனைச் சிவப்புக் கொண்டை குலுக்கி நாளை விடுதலைக்குக் குரலெடுத்துக் கூப்பிட்ட ஞானச் சேவலே! வானத்தைக்கூடக் குனிந்து கொண்டே பார்க்கப் பழகியவர்களுக்கு அண்ணாந்து பார்க்க ஆண்மை வழங்கிய மேன்மைக்காரனே! அன்னிய ஆதிபத்தியக் கந்தகக் காட்டை அனல் சூறையாடிய வேட்டைக்காரனே! புத்தம் புதுத் தமிழ்ப் பாட்டைக்காரனே. பாரதி! நீ பிறந்து நூறாண்டு! நீ பிறந்து நூறாண்டு! இந்தச் சுகப்போதில் உன் பாதத் தாமரைகளில் சாதனைச்சீதனம் ஏதாவது சமர்ப்பணம் பண்ண மூளை நரம்புகள் முறுக்கேறும்படிச் சிந்தித்துப் பார்க்கிறேன். பார்க்கிறேன்... 213

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/213&oldid=817189" இலிருந்து மீள்விக்கப்பட்டது