பக்கம்:பாரதியம்.pdf/215

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாதித்துவம் கொட்டு முழக்க கொட்டமடிக்கிறது சுரண்டல். ஆயிரம் உண்டிங்கு சாதி என்று நீ நியாயப்படுத்தி விட்டாயாம் ஆதலால் ஆயிரம் ஆயிரம் ஆயிரம் சாதிகள் வீதியிலே உன் வேதபுரத்தில் சாதிக்குச்சமாதிகட்டாமல் சமாதிகளிலும் பொறித்து வைத்துள்ளோம் பலசாதிச் சாசனங்கள்! மகாகவியே, வையகங் காப்பவனுக்கும் வாழைப் பழக்கடை வைப்பவனுக்கும் செய்தொழில் நேர்மை தேவையென்றாயே நீ இன்றைக்கோ பரம அநியாயம் சிம்மாசனம் ஏறிவிட அதற்குச்சாமரம் போடுகிறது தரும நியாயம். ஏமாற்றுத் தேசமயம் ஆனதால் முதலீடு வேண்டாத அரசியல் வியாபாரம் நட்டக் கணக்கின்றி நடந்துவருகிறது லஞ்சம் பிரபஞ்சமயம் ஆகவே அரசாங்க அலுவலகங்களில் மேஜைகளுக்கும் முளைத்துள்ளன கைகள் நாற்காலிகளுக்கும் முளைத்துள்ளன பைகள் அரசு ஊழியர்கள் மாதா மாதம் 215

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/215&oldid=817191" இலிருந்து மீள்விக்கப்பட்டது