பக்கம்:பாரதியம்.pdf/216

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஊதியம் பெறுவது இருக்கையில் போய் உட்காரத் தானாம் வேலை நடக்க வேண்டுமானால் மாமூல் அளக்கவேண்டுமாம் நவயுகத்தின் நாயகனே காகிதமும் ஆயுதமும் செய்யச் சொன்னாய் நீ நாங்கள் காகிதங்களையே ஆயுதங்களாகச் செய்து வைத்திருக்கிறோம். எங்கள் கரன்சிக் காகிதத் துப்பாக்கிகளுக்குத் தப்பிச் சென்றுவிடும் மானுடப்புலிகள் சிங்கங்கள் கிடையாதே? நீ முழங்கினாயே உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் என்று பொதுமேடைக் கழனிகளில் பொய்நாக்குக் கலப்பைகளால் வாயுழவு செய்பவனெல்லாம் வகைவகையாய் வருமான மகசூல் எடுத்துவிட, இந்த மண்ணின் நிஜ மைந்தனோ உதாசீனங்களின் களப்பலியாய் உருக்குலைந்து கிடக்கின்றான். இப்படி தேசம் கெட்டுக்கிடக்கையில் 216

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/216&oldid=817192" இலிருந்து மீள்விக்கப்பட்டது