பக்கம்:பாரதியம்.pdf/217

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எட்டயப்புரத்துப் பட்டயக்காரனே எப்படிக் காணிக்கை உனக்குப் படைப்பது? உன் காலக் கனவுகள் நனவுகளாக நடைமுறைப் பரிணாமங் கொள்ளாமல் இந்நூற்றாண்டு வேளையிலும் வழக்காடு மன்றங்களில் இழுபறிப் பொருளாய் வதைப்படுகின்றன. என்றாலும் கவிராஜனே எனக்கு நம்பிக்கை இருக்கிறது. ஆகாயச் சூரியனில் இன்னமும் அப்பிக்கிடக்கின்றன உன் ஆங்காரப் பார்வையின் அக்கினித்துள்கள் சுள்ளென்று தைக்கும் சூரியக் கூர்முனைக் கதிர்களை உன் சொல்லென்று கருதிச் சொக்கிப் போகிறேன். நித்த நித்தம் நீ வெறித்துப் பார்த்திருந்த நீலக்கடல் அலைகளின் உச்சந் தலைகளில் மிச்சமிருக்கிறது உன் சத்திய வேட்கை. கடலில் சூல்கொண்ட மேகம் கனமழையாய் விழும்போது இனம்புரியா உணர்வுகளில் மனம் நைந்துபோகிறது. சுழற்றி எறியும் சூறாவளிகளில் இன்னமுங் கலந்திருக்கின்றன 217

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/217&oldid=817193" இலிருந்து மீள்விக்கப்பட்டது