பக்கம்:பாரதியம்.pdf/219

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதி! உன் பெயரில் உயிர் இயக்கும் ஒரு சக்தி இருக்கிறது. சத்தியம் இருக்கிறது-வீர சபதம் இருக்கிறது. உன் பெயரில் சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் நாதமாய்-கீதமாய் நரம்பெல்லாம் முறுக்கேற ஒலிக்கிறது. 岭 •్మతి 虏 ஒலி பெருக்கிச்சத்தங்களுக் கிடையில் ஒரு உன்னத மெளனம் மத்தாப்பு வெளிச்சத்துக் கிடையில் ஒரு துருவ நட்சத்திரம்; சாராய வாடைக்கிடையில் ஒரு சந்தன நறுமணம்; புன்மைப் பொய்களுக்கிடையில் ஒரு புனித உண்மை; சுரண்டிய வெள்ளை இருட்டுக்கிடையில் ஒரு சுதந்திர தீபம், தியாக தீபம். 酸 శ్మీ• 219

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/219&oldid=817195" இலிருந்து மீள்விக்கப்பட்டது