பக்கம்:பாரதியம்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சென்னையில் 1904 முதல் 1908 வரை அரசியல் பாட்டுக்கள் பாடினார். அவை ஸ்வதேச கீதங்கள் என்று வெளியிடப்பட்டன. (வந்தே மாதரம், வங்கமே வாழிய முதலியவை) புதுச்சேரியில் 1908 முதல் 1909 வரை மறுபடியும் சில அரசியல் பாட்டுக்களைப் பாடினார் அவை 'ஜன்ம பூமி’ என்ற தலைப்பில் வெளிவந்தன. (எங்கள்தாய், சுதந்திரப் பெருமை முதலியவை) புதுச்சேரியில் தொடர்ந்து 1909 முதல் 1910 வரை ‘சுயசரிதை உள்பட ஒருசில சக்திப்பாட்டுக்களை ஒன்றிரண்டு அரசியல் பாட்டுக்களுடன் எழுதினார். அவை மாதர் வாசகம்’ என்ற பெயரில் வெளியாயின. (பாரத மாதா திருப்பள்ளி எழுச்சி மகாசக்தி, மகாசக்திக்கு விண்ணப்பம் முதலியவை) இதை அடுத்து, 1910 முதல் 1914 வரை பாரதி பல சக்திப் பாட்டுக்கள் பாடியிருக்கிறார். அவை ‘மாதா மணிவாசகம்’ என்ற தொகுதியாக வந்தன. (மகாகாளியின் புகழ், மகாசக்தி பஞ்சகம் முதலியவை) பாரதியின் மிகவளமானகவிதைப் படைப்புக் காலம் 1912-1917 என்று குறிப்பிடலாம். 1912இல் பாஞ்சாலி சபதத்தின் ஒரு பகுதியை எழுதி முடித்தார் பாரதி. 1915இல் பாஞ்சாலி சபதம்’, கண்ணன் பாட்டு. 'குயில் பாட்டு’, ‘குயில் ஆகிய மூன்றையும் படைத்து முடித்தார். இதே ஆண்டுகளில் 1917 வரைக்கும் ஒரு சில தனிப் பாட்டுக்கள் பாடினார். (மழை, புதிய ருஷியா முதலியவை). 1917க்குப் பிறகு 1919 வரை சீட்டுக்கவியும் வாழ்த்துக்கவியும் எழுத நேர்ந்தது பாரதிக்கு. மேலும் இந்தக் கடைசி ஆண்டுகளில் 1921 முடிய வசனத்தின் பக்கம் அதிகம் திரும்பியுள்ளார். இந்தக் குறிப்பிலிருந்து 1909இல் சக்தி மீது பாரதி பாடத் தொடங்கினார் என்பது புலனாகிறது. அதற்குச் சற்றுமுன் பாரதி பாடியிருப்பது அரசியல் பாடல்களை. சக்தியைப் பாடத் தொடங்குகையில் அரசியல் பாட்டுக்களையும் விடாமல் பாடியபோது, பாரதத்தாயைப் பராசக்தியாக அவர் குறியீடு செய்திருப்பதுதெரிகிறது. எங்கள்தாய் 1908-1909 வாக்கில் உருவான பாட்டு. 20

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/22&oldid=817196" இலிருந்து மீள்விக்கப்பட்டது