பக்கம்:பாரதியம்.pdf/220

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிலருடைய எழுத்து தினமும் கிழிபடும் 'காலண்டர்’ இன்னும் சிலருடைய எழுத்து வருடக் கடைசியில் பழசாகிப் போகும் பஞ்சாங்கம்; உன் எழுத்து இனிவரும் யுகத்தையும் காட்டும் தூரதரிசனம்.

  • ్మ•

மஞ்சத்தில் கசங்கும் மல்லிகைப் பூ அல்ல நெஞ்சத்தைக் கிள்ளிக் கிறங்க வைக்கும் ரோஜாப் பூ அல்ல கரிசல் காட்டுக் கர்ம வீரனே, மானத்தை மறைக்கும்ஆடை அளிக்கும் பருத்திப் பூ உன் மணிக்கவிதை! ఈ్మ* நீ ஒரு பித்தன்... ஆனாலும் சட்டையைக் கிழித்ததில்லை... காரனம உன் சட்டையிலே ஏற்கனவே ஏராளமான கிழிசல்கள்... பேனாமுள் ஊசியினால் எங்கும் நீக்கமற நிறைந்திருந்த சமூகக் கிழிசல்களைத் தைக்கவந்த பித்தன் நீ! புதுமைப் பித்தன் நீ!

  • ్మ•

220

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/220&oldid=817198" இலிருந்து மீள்விக்கப்பட்டது