பக்கம்:பாரதியம்.pdf/221

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீ ஒரு காதலன்... தேவருலகுக்குத் தேவைப்பட்ட பாவையர் ரம்பை ஊர்வசி திலோத்தமை என்றிவர் யாரும் உன் கனவில் வரவில்லை... கள்மயக்கம் தரவில்லை கொடிதுக்கிய குமரர்களும் குண்டடிபட்ட மறவர்களும் வெள்ளை ஆதிக்க வேரறுக்கத்துடித்து நின்ற மேலோரும் நூலோரும் உன் கனவில் வந்தார்கள் காதல் தந்தார்கள். ஆம். நீ வீரத்தை மோகித்த விநோதக் காதலன். శ్మీ• நீ ஒரு பக்தன்... தலையில் மொட்டை கழுத்தில் கொட்டை நுதலில் பட்டை இப்படிப் பண்டார வேஷம் பூண்ட பக்தனல்லன்... கையில் கோல் கண்ணில் கோபம் நெஞ்சில் ஆவேசம் கொண்டு பராசக்தியைப் பாரத சக்தியாக்கி ஆறுகால பூசையல்ல... அனுதினமும் அனுப்பொழுதும் 221

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/221&oldid=817200" இலிருந்து மீள்விக்கப்பட்டது