பக்கம்:பாரதியம்.pdf/222

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆராதனை செய்த அதிசய பக்தன் நீ! பாரதி! உன் சொற்களுக்கு உள்ள சக்தி அடடா... மந்திர சக்தி! எங்கள் சொற்களுக்கும் உண்டு சக்தி... ஆனால்... அது தந்திர சக்தி! 'சாதிகள் இல்லையடி பாப்பா என்றாய். நாங்களும்‘எங்கள் சாதிக்கு இணையாய் வேறு சாதிகள் இல்லையடி’ என்கிறோம் சங்கம் அமைக்கிறோம் சந்தா சேர்க்கிறோம் தலைவர் செயலர் பொருளர் என்று பதவிகள் பெறுகிறோம் பரிசுகள் பெறுகிறோம் தேர்தல் வந்தால்தெருத் தெருவாகச் சாதிக்கடைகளை விரிக்கிறோம்! சாக்கடை வணிகம் செய்கிறோம். பேருக்கு உன்-பிறந்த நாளிலும் உன்னைப் போன்ற உத்தமர் சிலர் உதித்த நாளிலும் சாதிகள் ஒழிக. என்று சங்கம் முழங்குகிறோம் பாரதி! 露 மனிதன்! நாங்கள் எல்லாம் வேடிக்கை மனிதர்கள்! 222

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/222&oldid=817201" இலிருந்து மீள்விக்கப்பட்டது