பக்கம்:பாரதியம்.pdf/223

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதி! வீரன். நாங்கள் எல்லாம் வாய்ச்சொல் வீரர்கள். 彰 శ్మీ காலையிலே. கடற்கரையில் கண்ணகியின் சிலையைக் கைகூப்பிக் கும்பிட்டுக் கற்புக் கவிதைகள் கொட்டுகிறோம்! அந்தி மாலையிலேகோடம்பாக்கத்தில் குடியிருக்கும் ஏதோ ஒரு மாதவியின் வீட்டுக் கதவைத் தட்டுகிறோம்! இரவில் மையல்| பகலில் சமையல்| இரண்டுக்கு மட்டும்தான் தையல் என்றெண்ணுகிறோம். ஆனாலும் “பெண்மை வாழ்கவென்று கூத்திடுவோம்” என்றுமேடையிலே வேஷம் போடுகிறோம்! சரிநிகர் சமானமாக வாழ்வோம் என்று வாய்கிழியக் கோஷம் போடுகிறோம்! பாரதி! நீயோ ராஜா ரவி வர்மாவின் கோலச்சித்திரம்! நாங்களோ மதன் வரையும் - வெறும் கேலிச் சித்திரம்!

  • *

223

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/223&oldid=817203" இலிருந்து மீள்விக்கப்பட்டது