பக்கம்:பாரதியம்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதை வைத்து, பாரதத்தாய் அடிமைப்பட நிலையை ஆழமாகவும் ஆவேசமாகவும் நினைத்துப் பார்த்ததால் பாரதிக்குப் பராசக்தியும் பாரதத் தாயும் ஒன்றாக விளங்கினர் என்றும், பாரதத்தாயின் மேல் கொண்டிருந்த பாரதியின் அன்புதான் பாரதியின் பராசக்தி வணக்கத்துக்கு அடிப்படை என்றும் விளக்கம் கொடுக்க ஒருசிலர் முன் வரலாம். இன்னொரு விளக்கம் பின்வருமாறு கொடுக்க வேறு சிலருக்குத் தோன்றக்கூடும். வங்காளத்தில் சாக்த மதம் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நிலவியிருந்த நிலைமையைப் பாரதி அறிந்துகொள்ள வாய்ப்பு நேர்ந்தது. அப்போது தென்னாட்டில் சிலர் சக்தி உபாசனை என்று தனிமையாக இருந்து செய்யும்போது, பழைய வழக்கத்தில் இருந்த படி மது மாமிசங்களை அந்தத் தெய்வத்துக்கு அவசியமான நைவேத்யம் என்று கொண்டு, இரகசியமாகச் சக்திபூசை செய்து வந்தனர் என்று பாரதி வெறுப்புடன் குறிப்பிட்டுள்ளார், வட இந்தியாவில் இருந்த நாட்களில் காளி பக்தி கொண்ட இராம கிருஷ்ணரைப் பற்றி அறிந்து (1902இல்), புதுச்சேரியில் வாழ்ந்த நாட்களில் காளி உபாசகரான அரவிந்தரிடம் பழகியதால் (1908இல்) சக்தி வணக்கத்தை அனுபவத்தில் பாரதி அடைந்தார் என்று முடிவு செய்ய வேறு சிலருக்குத் தோன்றக்கூடும். 3 பாரதியின் சக்தி வழிபாட்டுக்கு இந்த விளக்கங்கள் போதுமானவை அல்ல என்று கருதி, பாரதியின் குழந்தைப்பருவ, இளமைப்பருவ உளவியலில்தான் உண்மையான மூலகாரணம் இருக்கிறது என்று மற்றும் சிலர் தேட முயலலாம். இதை இங்கே சற்று விரிவாகப் பார்க்கலாம். 21

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/23&oldid=817206" இலிருந்து மீள்விக்கப்பட்டது