பக்கம்:பாரதியம்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

‘கடுவாய்சுப்பையர் திருநெல்வேலி மாவட்டத்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைசிக்கால கட்டத்தில் மிகச் செல்வாக்கானவர். “கடுவாய்' என்று அவருக்கு மக்கள் வைத்த பட்டமே அவர் தாட்டியமானவர் என்பதைக் காட்டுகிறது. அவர்தான் பாரதியின் பாட்டனார்.அவருக்கு ஏராளமான நெல்வயல்கள் இருந்தன. கடுவாய் சுப்பையர் மகன் சின்னச்சாமி தமிழ், ஆங்கிலம், தர்க்கம், கணிதம் ஆகியவைகற்றுத்தேர்ந்த அறிஞர். சின்னச்சாமி அய்யருக்குப் பல நல்ல பண்புகள் இருந்தும் முன்கோபம் மட்டும் அதிகம். சொந்தக்காரரோ மனைவியோ அவருக்கு எதிரே நின்று பேசவே பயப்படுவார்கள். சூரபத்மன் அரசு புரிந்தது போல நடந்து வந்தார் என்று பாரதியின் குடும்பத்தாரே குறிக்கின்றனர். பாரதி தன் தந்தையிடம் எதிர் நின்று பேசப் பயப்பட்டார். ஐந்து வயதில் தாய் லட்சுமியை இழந்த பாரதியின் உடல் நலத்தில் தந்தை கவலையெடுத்துக் கொள்ளவில்லை. வள்ளியம்மாள் என்ற சிற்றன்னையிடமே தனக்கு வேண்டியவைகளையெல்லாம் சொல்லிப் பெற்றுக்கொண்டார் பாரதி. எப்போதும் தந்தை தம் மகன் கல்விகற்பதிலும், கணிதம் படிப்பதிலும் கருத்தாக இருக்க வேண்டும் என்று கண்டிப்புக் காட்டி வந்தார். சமஸ்தானப் பெரியவர்களுக்கு நடுவே பாரதி உட்கார்ந்து எவ்வளவு நன்றாகப் பேசினாலும் விரும்பாமல் சின்னச்சாமி அய்யர் புலி போலச் சீறி விழுவார். பாரதி தந்தையின் கண்களில் அகப்படாமல் சுற்றிக் கொண்டிருப்பார். ஏழெட்டு வயதில் பாரதி மோகனமான பகற் கனவுகள் காண்பதிலும், சிங்கார ரசமுள்ள கவிகள் இயற்றுவதிலும் பிரியம் கொண்டார் என்றும், காலையில் இளவெயிலின் காட்சிகளிலும், நடுப் பகலில் ஒழிந்த ஒதுப்புறமான இடங்களிலும் கவிதைக் காதலியுடன் இன்புறுவதில் ஈடுபட்டிருந்து, மாலையில் தன் தாத்தாவின் வீட்டுக்குத் திரும்புவார் என்றும் பாரதி குடும்பத்தார் தெரிவிக் கின்றனர். இவ்வாறு உளவியல் ஆய்வாளர்கள் எடுத்துக்காட்டக் கூடும். எட்டயபுர மகாராஜா சின்னச்சாமி அய்யரிடம் 'உங்களுக்கு எதிரில் பாரதியைப் பாடச் சொன்னால் பயத்தினாலும், வெட்கத்தி னாலும் பாட மாட்டான். அவன் இங்கு வந்து பாடும் சமயத்தில் 22

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/24&oldid=817207" இலிருந்து மீள்விக்கப்பட்டது