பக்கம்:பாரதியம்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாங்கள் ஒளிந்திருந்து கேளுங்கள்’ என்று சொல்லுவார் என்றால் பாரதிக்குத் தந்தையிடம் எவ்வளவு பயம் என்பதை உணரலாம். பாரதிக்கு மணமான அடுத்த ஆண்டில் (பதினான்கு வயதில்) தந்தை சின்னச்சாமி அய்யர் நோய்வாய்ப்பட்டு இறந்தார். பாரதியின் பாட்டி பாகீரதி அம்மாள் ரொம்ப அன்புடன் பாரதியைப் பேணினார். அத்தை குப்பம்மாளிடம் பாரதிக்குத் தனிப் பாசம் இருந்தது. தந்தை இறந்த பின் காசியில் அத்தையின் வீட்டில் இருந்து படித்தார் பாரதி. காசியின் வங்காளி போல் கிராப் செய்து வகிடு எடுத்து வாரி விட்டு மீசை வைத்துக் கொண்டார் பாரதி. அது மாமா கிருஷ்ண சிவனுக்குப்பிடிக்கவில்லை. அதனால் அவருடைய கோபத்துக்கு ஆளானார் பாரதி. அப்போது பாரதிக்கு ஆறுதலாக இருந்தவர் அத்தை. காசியிலிருந்து 1902இல் பாரதியை எட்டயபுரத்துக்கு அழைத்து வந்தவர் எட்டயபுர மகாராஜா. எட்டயபுரத்தில் குல ஆசாரப்படி பாரதிக்கும் செல்லம்மாளுக்கும் ருது சாந்திக் கல்யாணம் நடந்தது. அந்த நிகழ்ச்சியில் பாரதி நவ நாகரிகமாகத் தோன்றினார்; பேசினார்; பாடினார். அதே 1902இல் எட்டயபுரம் சமஸ்தான உத்தியோகம் பாரதிக்குக் கிடைத்தது. அதே காலத்தில்தான் (20 வயசு) ஷெல்லிதாசன் என்று தனக்குப் புனை பெயர் வைத்துக் கொண்டார் பாரதி. ஷெல்லியன் கில்டு' என்று ஒரு குழுவையும் அமைத்ததாகத் தெரிகிறது. அதே ஆண்டில் பாரதி நாத்திகம் பேசினார் என்றும், ஷெல்லி, பைரன் முதலிய ஆங்கிலக் கவிஞர்களின் பாட்டுக்களில் மனம் ஆழ்ந்தார் என்றும் தெரிகிறது. திருநெல்வேலியில் தன்னுடன் படித்த சுப்பிரமணிய சர்மாவுடன் துரோபதை துகிலுரிதல்’ என்ற நாடகத்தைப் பார்த்தபோது பாரதி மனம் நெகிழ்ச்சி அடைந்தார் என்றும், புதுச்சேரியில்தான்'சக்திதாசன் என்று தனக்குப் புனைபெயர் சூட்டிக் கொண்டார்பாரதி என்றும் அவரது குடும்பத்தார் எழுதியிருக் கின்றனர். இப்படி உளவியல் ஆய்வாளர்கள் சொல்லி வரக்கூடும். இதுதான், பாரதியின் குழந்தைப் பருவ, இளமைப் பருவ உலகம் இந்த உலகத்தில் பாரதி தன் தந்தையால் கொடுமையாக நடத்தப்பட்டார் 23

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/25&oldid=817209" இலிருந்து மீள்விக்கப்பட்டது