பக்கம்:பாரதியம்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்றும், தன் போக்கில் வளர முடியவில்லை என்றும், பெண்களின் அன்பினால் பேணி வளர்க்கப்பட்டார்என்றும் அறியமுடிகிறது என்று இந்த ஆய்வாளர்கள் முடிவு கூறலாம். ‘சுயசரிதையில் பாரதி குறித்த ஒன்பது வயதுச் சிறுமியைப் பற்றி அடுத்து இவர்கள் சொல்வதை அறிந்து கொள்ளலாம். பாரதி குடும்பத்தார் அந்தச் சிறுமி பாரதி கண்ட கலைவாணிதான் என்று கருதுகின்றனர். பாரதி இளம் பருவத்தில் உண்மையாகவே சந்தித்த மானிடச் சிறு கன்னியே அவள் என்று பெ. தூரன் நினைக்கிறார். இளமையில் பாரதிக்கு உண்டான வெறும் பாலியல் தூண்டுதலால் கற்பனையில் உருவானவள் அவள் என்று வேறு சிலர் கருதுவதாகவும் தெரிகிறது. இந்த மூன்று விளக்கங்களில் எது பொருந்துவது என்பது ஆய்வுக் குரியது. உளவியல் ஆய்வின் அணுகுமுறையில் ஆங்கிலக் கவிஞர் ஷெல்லியைப் பற்றி எப்.எல்.லூகாஸ் கூறுவதை இங்கே ஒப்பிட்டுப் பார்ப்பது அவசியம் என்று உளவியல் ஆய்வாளர்கள் முன்வரலாம். ஷெல்லியின் தந்தை சர். டிமோதி ஷெல்லி பொதுவாக நல்லவர். ஆனால் மகன் ஷெல்லியை உணர முடியாமல் அவனைப் புண்படுத்தினார்; கொடுமையானதண்டனை கொடுத்தார். அதனால் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த ஷெல்லிக்கு மனம் பிறழ்ந்து போனது. ஷேக்ஸ்பியரின் வில்லன்களையே நல்லவர்கள் என்று எண்ணிவிட்டான் ஷெல்லி, ஒருமுறை தன் தந்தைக்கு நான் காயங்களால் அழிந்து போகிற ஒரு பூச்சி என்று நினைக்காதீர்கள் என்று கடிதம் எழுதினான் ஷெல்லி. தனது தந்தைக்கு ஒரு பதிலியாக அவன் காட்வின் என்பவரை எண்ணத் தலைப்பட்டான். கட்டறுத்த பிரமிதியூஸ் என்ற நாடகத்தில் கடவுள் என்ற தந்தையிடம் கூடக் குறைகண்டு எழுதியிருக்கிறான் ஷெல்லி. 24

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/26&oldid=817210" இலிருந்து மீள்விக்கப்பட்டது