பக்கம்:பாரதியம்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தனது தங்கைக்கும் தன் நண்பன் கிரஹாமுக்கும் வீட்டில் தன் தாய் மனப்பேச்சை எடுத்த போது வன்மையாக எதிர்த்தான் ஷெல்லி. அப்போது ஷெல்லியின் மனம் தந்தையிடமிருந்து பிரிந்து தாயிடம் அன்பு வைத்து, அதிலும் ஏமாந்து, அதன்பிறகு தாயிடமிருந்து தங்கையிடம் அன்பு கொண்டிருந்தது. தாயிடமோ தங்கையிடமோ, அதிகப்பாசம் கொண்டு விடுகிற இத்தகைய மனநிலை ஷெல்லியிடம் பல உணர்ச்சி மாற்றங்களை உண்டாக்கியது. அவனது பாலியலிலும் விசித்திர வழக்கங்கள் ஏற்பட்டன. ஒரு இலட்சியப் பெண்மைக்கு ஏங்கித் தவித்தது ஷெல்லியின் அடிமனம், அது கிட்டாமல் போவதுபோல் தோன்றிய போது, எப்படியாவது அதை அடையத் துடித்து, பல தவறான உறவுகள் கொள்ள நேர்ந்தது. ஷெல்லிக்கு என்று எப்.எல்.லூகாஸ் கூறுகிறார். ஷெல்லியின் மன உளைச்சலுக்கு அடிப்படைக் காரணம் அவன் தந்தை சர் டிமோதி ஷெல்லி கொடுமையாக நடத்தியது. அதனால் ஷெல்லியின் மனம் தாய்ப்பாசத்தோடு நோக்கியது. தாயிடமும் அமைதி பெறாமல் தன் தங்கையிடம் பாசம் வைத்து நிறைவு காணத் துடித்தது. அதுவும் பயனற்றுப் போகவே ஷெல்லி தான் உள்மனமார அவாவிய இலட்சியப் பெண்மைக்காக ஏங்கித் தவிக்கலானான். அதனால் நெறிதவறிய வழிகளில் அவன் திரும்பநேர்ந்தது. இவ்வாறு எப்.எல்.லூகாஸ் ஷெல்லியின் குழந்தைப் பருவ, இளமைப் பருவ உலகத்தை எடுத்துக்காட்டி ஷெல்லியின் கவிதையை ஆய்ந்திருக்கிறார். ஒரு மரத்தின் வேர்களைத் தோண்டிப் பார்க்கும் போது, அந்த வேர்களில் ஒரு சில பழுதுபட்டனவாக இருக்கவும் கூடும். இதனால் அந்த மரமே பயனற்றது என்று முடிவு கட்டிவிடக் கூடாது. மரத்தின் இனிய பழங்களே பார்க்கப்பட வேண்டியவை: பழுதுபட்ட வேர்கள் அல்ல. இப்படி எப்.எல்.லூகாஸ் கூறியிருப்பது பிராய்டின் உளவியல் ஆய்வுமுறையை அடிப்படையாகக் கொண்டது ஷெல்லிக்கு எப்.எல்.லூகாஸ் கூறியதை அப்படியே பாரதிக்கு ஏற்றிப்பார்க்க இந்த ஆய்வாளர்கள் முன் வரலாம்: பாரதியின் தந்தை சின்னச்சாமி ஐயர் பொதுவாக நல்லவர். ஆனால் மகன் பாரதியை அவர்கண்டுகொள்ளமுடியவில்லை. தாம் நினைத்த 25

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/27&oldid=817211" இலிருந்து மீள்விக்கப்பட்டது