பக்கம்:பாரதியம்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழியில் மகனைத் திருப்ப ஆசைப்பட்டு, அதனால் முடியாத போதெல்லாம் மகனை வன்மையாக நடத்தியிருக்கிறார். அதனால் பாரதியின் இளமனம் புழுங்கித் தவித்தது. தந்தை நினைக்காத வழியில் பாரதி நாத்திகம் பேசியதும், கூளப்பன் நாயக்கன் காதல் போன்ற சிருங்கார நூல்களில் பற்றுள்ளம் கொண்டதும் பாரதியின் இளமனப்புழுக்கத்தால் விளைந்தவை. இவ்வாறு உளவியல் ஆய்வாளர்கள் பாரதியின் மனப் பிறழ்ச்சியை எடுத்துப்பேசி மேலும் தொடர்ந்து இவ்வாறு கூறலாம். ஐந்து வயதில் தாயை இழந்த பாரதி, தந்தையிடம் அன்பைப் பெற முடியாததால், தன் தாய்க்குப் பதிலியாக யாரையும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆகையால் தாய்க்குப் பதிலியாக ஒரு இளஞ் சிறுமியைத் தன் மனசுக்குள்தானாகவே கற்பனை செய்து கொண்டார். அந்தச் சிறுமிதான் பாரதியின் ‘சுயசரிதை” யில் வருகிறவள் என்று இவர்கள் கருதுகிறார்கள். இவ்வளவு விரிவாக உளவியல் ஆய்வாளர்களின் விளக்கத்தை எடுத்துக் கூறக் காரணம் இது புதுமையாக இருப்பதும், இது எவ்வளவு தூரம் பாரதிக்குப் பொருந்தும் என்று பார்ப்பதும் ஆகும். முதலில் பாரதியின் தந்தை ஷெல்லியின் தந்தைபோல மகனைக் கொடுமையாக நடத்தினார் என்பதற்குப் போதுமான ஆதாரங்கள் இருப்பதாகத் தெரியவில்லை. பாரதி தமது ‘சுயசரிதை” யில் தந்தையைப் பற்றி இப்படிக் கூறவுமில்லை. "பாஞ்சாலி சபதமி ல் திரிதராட்டிரனை ஒரு நல்ல தந்தையாக, வியாசர் காட்டியதுக்கு மாறாகப் படைத்துள்ளார் பாரதி என்பது இங்கே மனம் கொள்ளத் தககது. ஆங்கோர் கன்னியைப் பத்துப் பிராயத்தில் ஆழ நெஞ்சிடை யூன்றி வணங்கினன் 26

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/28&oldid=817213" இலிருந்து மீள்விக்கப்பட்டது