பக்கம்:பாரதியம்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாய்க்குப் பதிலியாகக் கற்பனையில் தோன்றிய இளஞ்சிறுமி இலட்சியப் பெண்மையாக உருமாற, அவளை அடையமுடியாத ஏக்கத்தின் பதிலியாகப் பாரதி கண்டதுதான் சக்தி என்று கொண்டு வந்து முடிப்பது, கவிஞனின் மன இயற்கைக்கும் நடப்புக்கும் பொருத்தமற்றதாக இருக்கிறது. இலட்சியப் பெண்மையின் தோற்றம், நடப்பும் புனைவியல் கற்பனையும் உருவாக்க உண்டாகக் கூடியது. நடப்பில் சந்தித்த இளஞ்சிறுமி தனக்குக் கிடைக்காமல் போகும் தோல்வியில், அந்தச் சிறுமி கவிஞனின் சிந்தனையில் காதல் தூண்டும் இலட்சியப் பெண்மை ஆகிறாள். அவள் உண்மையும் கற்பனையும் கலந்த புனைவியல் வடிவம் என்று கூறவேண்டும். இத்தகையவள்தான் நடப்பிலிருந்து பாரதியின் கவி மனசுக்குள் இளங்சிறுமியாகத் தோன்றியவள். ஒரு கவிஞனின் நிறைவேறாத காதலின் உணர்ச்சி ஒரு இலட்சியப் பெண்ணை உருவாக்கிக் கொண்டு பாடுகிறது. இது கவிஞனுடைய வாழ்க்கையின் யதார்த்தத்தின் மீது எழுந்து பாடும்போது, புனைவியல் கற்பனை மிகுந்தும் அமையலாம்; அல்லது கவிஞனுடைய காதலுக்கும் சமூக யதார்த்தத்துக்கும் அவன் தொடர்புபடுத்த முன் வரும்போது, யதார்த்தவியலான சித்திரிப்பு மிகுதிப்பட்டும் வரலாம். இப்படிப் பார்ப்பதை விட்டுவிட்டு, அடிஆழம் காணமுடியாத 'பதிலியைத் தேடல் என்ற முறையில் ஆய்வு செய்ய முற்படுவது ஒன்றுக்கு ஒன்று உண்மையான பொருத்தத்தை அறியமுடியாமல் செய்து விடுகிறது. பாரதி எந்த இடத்திலும் சக்தியை காதல் உணர்ச்சியுடன் பாடவில்லை. மூன்று காதலில் திருமகளையும் கலைமகளையும் காதலுடன் பாடி வரும்போது சக்தியை அன்னை வடிவமாகக் காண்கிறார். தாய்க்குப் பதிலியான இளஞ்சிறுமிதான் சக்தி என்றால், 28

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/30&oldid=817217" இலிருந்து மீள்விக்கப்பட்டது