பக்கம்:பாரதியம்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அந்த இளஞ்சிறுமி மீது பாரதி காதல் கொண்டிருந்தார் என்ற கருத்தமைப்பு சக்தியுடன் பொருந்தக்கூடியதாக இல்லை. பாரதி 1909இல் சக்திப் பாட்டுக்களைப் பாடத் தொடங்கினார் என்று முன்பே பார்த்தோம். வட இந்தியாவில் இருந்த நாட்களில் பாரதி இராமகிருஷ்ணரைப்பற்றி (1902)இல் அறிந்ததும் நிவேதிதா தேவியை (1905)இல் நேரில் தரிசித்தபோதும், அரவிந்தருடன் (1908)இல் பழகத் தொடங்கியதும் பாரதியைச் சக்தி வழிபாடு பற்றிக்கொள்ள வைத்திருக்க வேண்டும் என்று காண்பதே பொருந்தக்கூடியதாக இருக்கிறது. புதுச்சேரியில் 'சக்திதாசன்’ என்று புனைபெயர் வைத்துக்கொண்டதும் இதை மெய்ப்பிக்கிறது. பாரதி சக்தி தர்மம் என்ற கட்டுரையில் இவ்வாறு குறிப்பிடுகிறார்; 'துலத்தை அறிந்தாலொழியச் சூக்குமத்தை நன்கு தெரிந்து கொள்ள முடியாது. இகலோக ஞானத்தை இகழ்ச்சியாகப் பேசும் ஆத்ம சாத்திரம் பொய். உண்மையான ஆத்ம சாத்திரம் இகலோக ஞானத்தை வளர்க்கும். வான சாத்திரம் இல்லாத நாட்டில் ஞானவாசிட்டம் பயன்தரமாட்டாது. பராசக்தியை முதலாவது இவ்வுலகத்தில் கண்டு வணங்குதல் வேண்டும்...” பாரதியின்சக்திக் குறியீடு ஆற்றல், வேகம், மாற்றம், சமுதாய மாற்றம் ஆகிய உட்பொருள்களை அங்கங்கே உணர்த்துவது. ‘இகத்திலே சக்தியைக் கண்டு போற்றி நலம் பெற வேண்டும் என்ற சமுதாய நடப்பு சார்ந்த கவிதைக் கொள்கையுடன் பாரதி பாடியுள்ள சக்திக் கவிதைகளில் வெற்றி அடைந்த படைப்புக்களை இங்கே குறிப்பிடுவது மேலும் விரிவான திறனாய்வுக்கு வழிவகுக்கும். இதைக் கூறும் முன்பாக மற்றொன்றையும் இதே இடத்தில் தெளிவு படுத்திவிடுவது அவசியம். பாரதி தமது ‘சுயசரிதை” யில் இளஞ்சிறுமியை வாழ்க்கையின் நடப்பும் புனைவியல் கற்பனையும் கலந்த காதல் மற்றும் இலட்சியப் பெண்மை வடிவமாகப் 29

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/31&oldid=817218" இலிருந்து மீள்விக்கப்பட்டது