பக்கம்:பாரதியம்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடியிருப்பது போல, வேறு சில கவிதைகளிலும் வெவ்வேறான, புதிய புதிய உணர்ச்சிகளும் கருத்துக்களும் தோன்றும்படி பாடியிருக்கிறார். வள்ளி (வள்ளிப்பாட்டு), காற்று வெளியிடைக் கண்ணம்மா (கண்ணம்மாவின் காதல்), ராதை (ராதைப்பாட்டு), வெண்ணிலா (வெண்ணிலாவே), புதுமைப்பெண் (புதுமைப்பெண்), அழகு (அழகுத் தெய்வம்), சந்திரன் (சந்திரமதி), கண்ணம்மா (கண்ணன்பாட்டு) ஆகியோர் பாரதி கண்ட இலட்சியப் பெண்மை வடிவங்கள். இவர்களில் யாரையும் சக்திக் குறியீட்டுடன் தொடர்பு படுத்த முடியாது. ஏனென்றால் இவ்வாறு தொடர்புபடுத்தவில்லை பாரதி. இவர்களுடன் பாரதியின் அற்புத நவிற்சிக் கதையான ஞானரதமி’ல் வரும் பர்வத குமாரியும், பாஞ்சாலி சபதமில் வரும் பாஞ்சாலி’யும் சேர்க்கப்பட உரியவர்கள். பாரதியின் பாஞ்சாலி இலட்சியப் பெண்மையின் குறியீடு; பாரதத் தாயின் உருவகம்; ஆனால் சக்தியின் குறியீடாகப் பாரதியால் பாடப்படவில்லை. இனி, சக்தியின் மீது துதிப்பாடல்களை நீக்கி விட்டு, சக்திக் குறியீடு கருத்து வளத்தோடும் கலைத்திறனோடும், கவிதைக் கற்பனை யோடும் அமைந்த சக்திக் கவிதைகளைப் பார்க்கலாம்; காணிநிலம், நல்லதோர் வீணை, பராசக்தி, யோகசித்தி, ஊழிக்கூத்து, மழை, புயல்காற்று, பிழைத்த தென்னந்தோப்பு, மாலை வருணனை, (பாஞ்சாலி சபதம்) சக்தி (வசன கவிதை), ஜயபாரத, பாரதமாதா, எங்கள் தாய், வெறி கொண்ட தாய் பாரதமாதா திருப்பள்ளி எழுச்சி, பாரதமாதா நவரத்தின மாலை, பாரத தேவியின் திருத்தசாங்கம், தாயின் மணிக்கொடி பாரீர், தமிழ்த்தாய் ஆகியவை சக்திக் குறியீடு வெவ்வேறான புதிய புதிய உணர்ச்சிகளும் கருத்துக்களும் தோன்றும்படி பாரதி அமைத்த கலைமதிப்பீடு உயர்ந்த படைப்புக்கள் என்று தெரிவு செய்யலாம். 30

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/32&oldid=817219" இலிருந்து மீள்விக்கப்பட்டது