பக்கம்:பாரதியம்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒருங்கிணைந்த பார்வையில் “கண்ணன் பாட்டு” - ஒரு தேடல் ஞானி பாரதியின் பாடல்களுள் உச்சநிலையாக மதிப்பிடத்தக்கது கண்ணன் பாட்டு. இதன் ஆக்கத்தினுள் மூலப்பொருள்களாகச் சென்று சேர்ந்தவை எவை என்று கணக்கிடுவது அரிய செயல். ஆழ்வார் பாடல்களில் பாரதி மனம் தோய்ந்திருந்தார். அவற்றின் தொடர்ச்சிதான் கண்ணன் பாட்டு என்று கூறப்படுமானால் கண்ணன் பாட்டின் சுயத்தன்மையை நாம் மறுத்தவராவோம். படைப்பு ஒன்றினுள் மூலப்பொருட்கள் பல சென்றாலும், இறுதி விளைவு, ஒரு அற்புதம். தனிப்பொருள். கண்ணாடி உருவாக்கத்தினுள் மணலும் சுண்ணாம்பும் கலந்திருக்கின்றன என்று கூறிவிடுவது கண்ணாடி பற்றிய விளக்கம் ஆகாது. சுண்ணாம்பும் மணலும் ஒர் உயர் கொதி நிலையில், ஒரு பாய்ச்சலாக இன்னொரு புதிய பொருள் தோன்றுகிறது என்பது தான் கண்ணாடிபற்றிய சரியான விளக்கம். அது போலத்தான் செடியில் தோன்றும் மலரும், உலகில் தோன்றிய மனிதனும். படைப்பாளிகள் இவ்வகையில்தான் பிரும்மாக்கள், பாரதியின் கண்ணன் பாட்டுக்கான மூலப்பொருட்களுள் ஆழ்வார் பாடல்கள் முக்கியமானவை என்பதற்கு மேல், ஆழ்வார்பாடல்களின் 31

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/33&oldid=817221" இலிருந்து மீள்விக்கப்பட்டது