பக்கம்:பாரதியம்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பங்கை முதன்மைப்படுத்திவிட முடியாது. தவிர ஆழ்வார்பாடல்கள் பாரதியின் சமகாலத்திலும் பாரதி மீதும் மற்றவர் மீதும் செல்வாக்குச் செலுத்தி வந்ததன் காரணத்தை நாம் காணாதிருந்துவிட முடியாது. இத்தகைய ஆற்றல்மிக்க செல்வாக்கே இன்னொரு புதிய படைப்பைத் தூண்டும் திறன் வாய்ந்தது என்பதையும் நாம் கவனிக்கவேண்டும். பாரதி காலத்தில் ஆழ்வார் பாடல்கள் படிக்கப்பட்டன என்று மட்டுமே கூறுவதாயின், பாரதி படைப்பின் தனித்தன்மையை விளக்க முடியாது. பார்த்துக் கவிதை எழுதிய போலிப் புலவன் ஆகிவிடுவான் பாரதி. பாரதியின் சமயக் கொள்கைகளும் ஆற்றல் மிக்கதொரு போக்கு, அத்வைதம். இந்த அத்வைதம், இந்திய வரலாற்றில் எல்லாக் காலத்தும் ஒரே பொருள் படுமாறு இருந்ததில்லை. காலத்தின் தேவைக்கேற்றவாறு புதுப்பொருளோடு - அது முற்போக்காகவோ பிற்போக்காகவோ விளக்கப்பட்டு வந்திருக்கிறது. ஒவ்வொரு காலமும் தன் தேவைக்கேற்பவே, தன் முன்னைய காலத்தையும், தனக்குப் பின் வரும் எதிர்காலத்தையும் பார்க்கிறது என்பது வரலாற்றுப் பார்வை பற்றிய அக்கறை உடையவர் புரிந்துகொள்ளக் கூடிய எளிய உண்மை, கண்ணன் பற்றிய அற்புதக் கற்பனைகளும் இப்படிக் காலத்துக்கேற்ற பொருட் பொலிவு பெற்றவையே. பாரதியிடம் வந்து சேர்ந்த அத்வைதம்; விவேகானந்தர் - நிவேதிதா வழி வந்த அத்வைதம். உலக வரலாற்றில் சோசலிசத்தின் தேவை பற்றிய தீவிர எழுச்சிகள், பிரான்சிலும் பிற நாடுகளிலும் தொடங்கி விட்ட காலம் விவேகானந்தர் காலம். எல்லோரும் பிருமம் என்ற கோட்பாடு - ஆண்டான் அடிமைச் சமுதாய முறையைத் தகர்க்கத் துண்டும் கோட்பாடு. எல்லோரும் சமம் என்றால், இங்கு வெள்ளையர்கள் எதற்காக இந்தியரை அடக்கி ஆளவேண்டும் என்ற அர்த்தத்தோடு இக்குரல் எழுகிறது. உள்நாட்டினுள்ளும் எல்லோரும் சமம் என்ற கோட்பாடு, 'இனிச் சூத்திரர்கள் அரசாளட்டும் என்ற குரலாக விவேகானந்தரிடம் ஓங்கி ஒலிக்கிறது. அதாவது, அன்று அறியப்பட்டிருந்த பெரும்பாலும் புருதான் முதலியவர்களின் விளக்கத்தின் வழியே வந்த சோசலிசக் கருத்தாக்கமும், இந்தியச்சமய மரபில் வந்த அத்வைதம் என்ற கருத்தாக்கமும் ஒரு புதிய கோலத்தில் இங்கு இணைகிறது. பாரதியிடம் வெளிப்படும் அத்வைதம் இத்தகையது. திலகரையோ, அரவிந்தரையோபாரதியின் அத்வைதப் S2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/34&oldid=817222" இலிருந்து மீள்விக்கப்பட்டது