பக்கம்:பாரதியம்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாளடைவில் இடங்கொடுத்ததை, இந்தியத் தத்துவ வரலாறு விளக்குகிறது. இத்தகைய ஆய்வுகள் நவீன காலத்திலும் தொடர்கின்றன. ஐன்ஸ்டீன், ஆர்தர் எட்டிங்டன் முதலியவர்களையும் இன்று கார்ல்சாகள் முதலியவர்களையும் குறிப்பிடலாம். இவர்கள் போலவே, லெனின் முதலியவர்களும் இத்தகைய ஆய்வு முயற்சிகளில் குறிப்பிடத் தக்கவர். அதாவது, எல்லாக்காலத்தும் இத்தகைய, கவர்ச்சியான, தேவையான, இந்த ஆய்வில் தேடலில் ஈடுபட்டவர்கள், இறுதி உண்மையைத் திட்டவட்டமாக, துல்லியமாக, தமக்கும் பிறர்க்கும் மெய்ம்மைப் படுத்தும் முறையில் விளக்க அல்லது விளங்கிக் கொள்ளாத நிலையில் இறுதியுண்மையை, ஒன்றாக, பலவாக, ஒன்றினுள் பலவாக, பலவற்றினுள் ஒன்றாக மதிப்பிட்டனர். அந்த மதிப்பீட்டில் அவர்கள் எப்போதும், மாறாத, உறுதியான கருத்து உடையவர் களாகவும் இல்லை. தமக்குள்ளேயே முரண்பட்டும் - அந்த முரண்பாட்டில் சிக்கித் தவித்தவர்களும்தான். கூடவே, இன்னொரு பிரச்னையும் தொடர்கிறது. பிரபஞ்சம் என்ற புறப்பொருள் பற்றிய பார்வை, எல்லார்க்கும் புறம் சார்ந்த பார்வையாகவே இருப்பதும் இல்லை. அதாவது, அகத் தேவையைக் கொண்டும் இந்தப் புறப் பார்வை அமைகிறது. அதாவது, பிரபஞ்சத்தின் இறுதிப் பொருள் எப்படிப்பட்டதாக இருந்த போதிலும், அதைப் பற்றி அறிவதற்கான மனிதனின் அகத் தேவை, சமூகத் தேவை-யின் துன்புறுத்தலின்போதுதான், புறப்பொருள் பற்றிய தேடலிலும் விளக்கங்களிலும் மனிதன் ஈடுபடுகிறான். இதன் முக்கியத்துவத்தை நாம் எவ்வளவு வற்புறுத்தினாலும் தகும். தத்துவம், சமயம் முதலியவற்றில் அகத்தின் வலிமை சில சமயங்களில் முற்றான அகவியலாகப் பெருத்து விடுவதற்கும் கூட, இந்த நுட்பமான ஆய்வுப் போக்கின் தீவிரத்தையே காரணமாகச் சொல்ல வேண்டியிருக்கிறது. லெனின் இந்த உண்மையை நன்றாகவே புரிந்திருந்தார். அப்படியானால், இந்த மனிதனின் அகத் தேவைகள் என்ன? இவன் தான் வாழும் உலகத்தோடு ஒன்றியிருக்க வேண்டும். இவனது வாழ்க்கையும் வாழ்க்கை மேன்மையும் புறஉலகத்தோடு பொருந்தியிருக்கவேண்டும். அதாவது இந்த உலகம் இவனு 34

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/36&oldid=817224" இலிருந்து மீள்விக்கப்பட்டது