பக்கம்:பாரதியம்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டையதாக இருக்கவேண்டும். இவன் வாழ்வுக்கு உகந்ததாக இவனுக்கு நிறைவு தரத்தக்கதாக இவனது வளர்ச்சிக்கு உறுதுணை யானதாக இருக்க வேண்டும். இவனுக்கு உலகம் உடைமைப்பட வேண்டும் என்பதல்ல இங்கு முக்கியம், உரிமைப்பட வேண்டும். மனிதர் எல்லோருக்குமாக உரிமைப்படவேண்டும். இவ்வாறு இல்லாமல், புற உலகமும் இவனும் முரண்பட்ட நிலையில், இவனுக்கு வாழ்க்கை அந்நியமாகிறது; அவலமாகிறது. புற உலகம் என்பது முதலில் இவன்சார்ந்த சமூகச்சூழல்; இந்தச்சூழலுக்குள்தான் இவன் தனக்கான வாழ்க்கையை நிறைவு செய்து கொள்ள வேண்டும். இதன் மூலமே அப்புறம் இவன் வானத்தை வசப்படுத்த வேண்டும். நிறைவு செய்து கொள்ள இயலாத நின்லயில் தான், பித்தம் ஏறிய நிலையில், உக்கிரத்தோடு இவன் கேள்வி கேட்கிறான்? எப்படி, ஏன் இது நேர்ந்தது? எனக்கு இதைச் செய்தவர் யார்? ஏன் செய்ய வேண்டும்? எனக்கு விடுதலை சாத்தியமா? இந்த உலகத்தைப் படைத்து ஆட்டுவிப்பது பிசாசா? தெய்வமா? இத்தகைய கூர்மையான கேள்விகள்தான், இவனை வரலாற்றாய்வுக்குள்ளும் அறிவியல் முதலிய ஆய்வுகளுக்குள்ளும் இவனை இடைவிடாதுதுரத்துகின்றன. இந்தத் துரத்தலின் வேகத்தையும் வேதனையையும் இடையிடையே பெறும் வெற்றிகளையும் வெற்றிகளை இழந்து விட்டு மீண்டும் துரத்தப்படுத்தலையுமே இவனது கலை இலக்கியங்கள் வெளிப் படுத்துகின்றன. வேட்டை நாய்களின் துரத்தலில் பாதுகாப்புத் தேடி ஒடி ஒரு குகையில் ஒளியும் மான் போல, விடலைப் பயல்களின் தொல்லையில் தாய் மடி தேடித் தவிக்கும் குழந்தை போல, மனிதன் தன்னை நெருக்கடியில் உணர்கிறான். உலகம், சமூகம், பிரபஞ்சம் இவனோடு முற்றொருமையில் இருக்க வேண்டும். அதாவது இவனுடான ஒருமையில் இருக்க வேண்டும் என்பது இவனது ஆசை. இத்தகைய உலகமே இவனுக்கு ஆரோக்கியமான, பாதுகாப்பான உலகம். சமூக உறவுகள், பகைமைப்பட்ட உலகில் மனிதனின் பகைமையற்ற ஒருமைத் தேட்டமே, மோட்சம், நிர்வாணம், கடவுள், சக்தி. இன்னொரு கட்டத்தில் சோசலிசம், கம்யூனிசம் என்ற பல்வேறு வடிவங்களைப் பெறுகின்றன. - இது வரை விவரித்த இறுதி உண்மை பற்றிய தேடலை இப்பொழுது நாம் புரிந்துகொள்ள முடியும். இத்தேடல் முற்றிலும் புறப்பொருள் 35

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/37&oldid=817225" இலிருந்து மீள்விக்கப்பட்டது