பக்கம்:பாரதியம்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பற்றியதல்ல. அதுபோலவே முற்றிலும் அகம் சார்ந்ததும் அல்ல. அகமும் புறமும் இதில் கலக்கின்றன. ஒன்றை மற்றது பாதித்து ஊடுருவி உட்கலந்த நிலையில், எது அகம், எது புறம் என்று பிரித்தறியாத நிலையில் இணைந்திருப்பன. இந்நிலையில், இது அகத்தினுள் வந்து செறிந்தபுறம்: அல்லது புறம் செறிந்த அகம். உயர் கொதிநிலையில் உருவான கண்ணாடி இதனைப் பிரித்துப் பார்ப்பது, இனி வசதிக்காக என்பதையும், இரண்டின் வளர்ச்சிக்கும் அல்லது இரண்டின் ஒன்றான வளர்ச்சிக்கும் இத்தகைய பிரித்துப் பார்த்தல் தேவை என்பதையும், வளர்ச்சிகோரி இவை இன்னொரு கட்டத்தில் முரண்படும் என்பதையும், இந்தப் பிரிவினை முற்றாகத் தொலை தூரங்களில் செல்லும்போது இணைப்புக்கான தீவிரம் பெருகி விடுகிறது என்பதையும், இத்தகைய இணைப்பு முயற்சிகள் தேவைப்படும் போதே, அத்வைதம், மார்க்சியம் போன்ற ஒருங்கிணைந்த பார்வைகள் தேவைப்படுகின்றன என்பதையும் நாம் இங்கு மறந்துவிடாமல் இருக்கவேண்டும். இவ்வாறு, அகமும் புறமும் ஒன்றிணைந்த இந்தத் தீவிரமான இயக்கத்தை - மனநிலையை எவ்வாறு வர்ணிப்பது? சொற்களால் வெளிப்படுத்தப்படும் குறிப்பிட்ட உணர்வு நிலைகளில் இது அடக்கம் கொள்ளுமா? பல்வகை உணர்வுகள் குவிந்து தீவிரப்பட்ட இந்த மையம் - அல்லது எல்லாமாகிய இந்தத் தீவிர உணர்வு, வெளிப்படுத்த வேண்டிய தேவை கருதிப் பிரிக்கும்போது எத்தகைய வெளிப்பாடுகளைப் பெறும்? - அதாவது, புறமும் அகமும் செறிவு பெற்ற நிலையில், அல்லது செறிவை நோக்கித் தீவிரப்பட்ட நிலையில் - இந்த மனநிலை எத்தகையது என அறிவு தலையிட்டு ஆராயும் நேரத்தில் எத்தகைய வெளிப்படல்களை இது பெறும்? இந்த வெளிப்படல்கள் பலவகையாகவே விளக்கம் பெறல் சாத்தியம். சிக்கலில் செறிவுடையது பல பரிமாணங்களைப் பெறும், தன் உள்ளடக்கத்திலும் பார்வையிலும். பலவகை விளக்கங்களில் சில; ஒன்று, தாய் மகள் உறவு; அன்பு அருள்தான் இங்கு முக்கிய பாவம்; இன்னொன்று காதலன் - காதலி உறவு; கலப்பில் இது உயர்நிலை; நெகிழ்வில் இது உச்சக்கட்டம். மற்றொன்று; தோழர்களுக் கிடையிலான உறவு; அறிவு நிலையிலும் அன்பு நிலையிலும் ஓர் இணைப்புக் கோலம். மேலும் ஒன்று. ஒரு சீடன் உறவு; புறம் அகத்திற்குள் அறிவாக இறங்கும் நிலை. கூடவே ஒரு கேள்விக்கும் இடம் உண்டு. முற்றான இணைவு சாத்தியமா? அதுபோலவே, S6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/38&oldid=817226" இலிருந்து மீள்விக்கப்பட்டது