பக்கம்:பாரதியம்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முற்றான இணைவு நோக்கிய பயணத்தின் இடைநிலைகளாக இவற்றில் சிலவற்றைக் கூறுவதற்கும் இடம் உண்டு. இந்தியச் சமயங்கள், இவ்வுறவுக் கோலங்களில் சிலவற்றை விவரித்திருப்பது இங்கு நினைவுக்கு வரலாம். இறைவனுக்கும் மனிதனுக்கும் உள்ள உறவை (இங்கு இறைமை என்பது, பிரபஞ்சம், உலகம், வரலாறு, சமூகம் எனப் பலபொருள் படுவதைத் தாகூர் விளக்கியிருப்பதைக் கவனித்துக் கொள்க) நால்வகை உறவுகளில் கண்டறிந்தது சைவம். லீலை எனப் பேசுகிறது வைணவம். தாய்மை எனப் பேசுவது சாக்தம், தாந்திரிகம் முதலியவை. பிற சமயங்களின் வர்ணனைகளும் ஏதாவது ஒரு பாவனைக்குள் அடங்கும். தந்தை மகன் உறவு, கிறித்துவத்தில். ஆண்டான் அடிமை முறை, சில சமயங்களில். முன்னைய சமயங்களைப்போலவே, பின்னைய தத்துவங்களும் இம்முறையில் விளங்கிக் கொள்ளத்தக்கவை. மார்க்சியம் வகுக்கும் உறவும் இப்படி விளக்கப்படலாம். சமூக வரலாற்றுப் போக்குகள், கட்டங்கள் முதலியவற்றை ஒட்டி இந்த வேறுபடல்கள் நிகழ்கின்றன. பாரதியின் கண்ணன்பாட்டை விளங்கிக் கொள்ளகண்ணன் பாட்டின் பல்வேறு பரிமாணங்களாகிய தோற்றங்களை ஒருமித்த பார்வையில் விளங்கிக் கொள்ள - இவ்வகை விளக்கம் பயன்தரலாம். இது தத்துவ விளக்கம் மட்டுமே. இது அப்படியே கவிதை உருக்கொள்ளாது. அப்படி உருக்கொண்டால், அது கவிதையும் ஆகாது, பாரதிக்குள் செறிவு பெற்ற அகம் புறம் இணைவு பெற்ற தீவிர உணர்வு - அதாவது, இம்முறையில் பாரதிக்குள் செறிந்த கனல், மெல்ல மெல்லக் குளிர்ந்து தன்மைப்பட்டு நீராகி நிறைந்து கவிதையாகிக் கொட்ட வேண்டும்வர்ணனைகளில், படிமங்களில், கதைகளில், கற்பனைகளில், நாடக ஆக்கங்களில் நகைச்சுவையில் - இப்படி எத்தனையோ கோலங்களில் கவிதை கொட்ட வேண்டும். தமக்குத் தேவையான, நாம் விரும்பும் மேன்மையான மனித உறவுகளை இக்கவிதைகள் பேசுகின்றன. பாரதிக்குள் மட்டுமல்ல; ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் செறிந்திருந்த உணர்வுநிலை தீவிரப்பட்டநிலை - இத்தகைய உணர்வு நிலை, தந்தை தாய் குரு சீடன் காதலி குழந்தை எனப் பல்வேறு பரிமாணங்களில் வெளிப்படற்குரியது. பாரதி அறிந்திருந்த சமகால விஞ்ஞான அறிவும், சமகாலம் பற்றிய சமூக உணர்வும் இக்கவிதைகளின் ஆக்கத்திற் கலக்கின்றன. இவன் கண்ட இலட்சிய சமூகத்தில் பகை 37

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/39&oldid=817227" இலிருந்து மீள்விக்கப்பட்டது